• சற்று முன்

    "நாங்கள் இரண்டாம் தர குடிமக்களா?" - மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்கும் பாலினம் மாறியோர்


    பாலினம் மாறியோர் என்பவர்கள் யார்?
    "தாங்கள் பிறக்க நேர்ந்த பாலினத்தை வசதியாக உணராதவர்களே பாலினம் மாறியோர். பிறந்தவுடன் மருத்துவர்கள், பெற்றோர் மூலமே பாலினம் அடையாளம் காட்டப்படுகிறது. தற்போதைய மசோதாவின் பெயரில் 'உரிமை பாதுகாப்பு' என்ற சொல் இருக்கிறது. ஆனால், இது எங்கள் உரிமைகளை மறுக்கிறது" பாலின சிறுபான்மையர் நல செயற்பாட்டாளரான பிட்டு.

    ஒருவர் பாலினம் மாறியவரா (திருநங்கையா?) என்பதை ஒரு பரிசீலனைக் குழுவே முடிவு செய்யும் என்கிறது இந்த மசோதா.

    "தமது சொந்தப் பாலினம் என்ன என்பதைத் தீர்மானித்துக்கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை என்பது அடிப்படை உரிமை என 2014-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில் இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசோ, மருத்துவரோ, குடும்பத்தினரோ ஒருவரது பாலினத்தை தீர்மானிக்க முடியாது என்பது அந்த தீர்ப்பின் கருத்து. மாறாக இந்த மசோதாவில் அரசு நியமிக்கும் ஒரு பரிசீலனைக் குழுவுக்கே அதை முடிவு செய்யும் அதிகாரம் இருக்கும் என கூறப்படுகிறது" என்று பாலின சிறுபான்மையினர் நல செயற்பாட்டாளரான மீரா சங்கமித்ரா. பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒருவரையே சட்டரீதியாக பாலினம் மாறியோர் என்று கூற முடியும் என்கிறது இந்த மசோதா.

    "சிறுவயதிலிருந்தே என்னை நானே ஒரு ஆணாக நினைக்கிறேன். இந்நிலையில், அரசாங்கம் நியமிக்கும் ஒரு குழு, நான் ஆணா அல்லது பெண்ணா என்பதை எப்படி கூற முடியும்? இது என்னுடைய உடல். நான் அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது முற்றிலும் எனது முடிவு. வெறும் அறுவை சிகிச்சை என்னை ஆணாக மாற்றாது" என்று கூறுகிறார் திருநம்பியான சரண்ஸ் பதக்.



    பிச்சை எடுப்பது தண்டனைக்குரிய குற்றம்
    இந்த மசோதா திருநங்கைகள் பிச்சை எடுப்பதை தண்டனைக்குரிய குற்றம் என்கிறது. "திருநங்கைகள் பிச்சை எடுத்தால் ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை சிறைத்தண்டனை வழங்குவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. ஆனால், இதில் இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை குறித்து எதுவுமே கூறப்படவில்லை. மாறாக எங்களை தண்டிப்பது குறித்தே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்கிறார் பிட்டு.

    இந்த மசோதாவின்படி, பாலினம் மாறியவர்கள் மேஜரான பிறகும்கூட தங்கள் பெற்றோருடனோ அல்லது காப்பகத்திலோதான் இருக்க வேண்டும். மேலும், பாலினம் மாறியோர் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானால் குற்றவாளிக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை மட்டுமே வழங்கப்படும். ஒரு பெண் பாலியல் துப்புறுதலுக்கு உள்ளானால், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கும் அதே சட்டம், ஒரு திருநங்கை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானால் குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்படும் என்கிறது இந்த மசோதா. இப்படி ஒரு பாகுபாடு காட்டும், பாலினம் மாறியோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் செயலை நாடாளுமன்றம் எப்படி ஊக்குவிக்க முடியும்? என்று கேள்வியெழுப்புகிறார் மீரா.

    இந்த மசோதா சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad