கனடா பிரதமரை சந்திக்க ஆவலாக இருக்கும் இந்திய பிரதமர்
பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
உலகின் வசீகர தலைவரான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து நேற்று மீண்டும் டெல்லி திரும்பிய கனடா பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில், இன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
கருத்துகள் இல்லை