Header Ads

  • சற்று முன்

    இந்திய பொருளாதாரத்தில் 2018 மிக கடினமாக இருக்கும் என்கிறார் - சமீர் ஹஷ்மி

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு 2017-ஆம் ஆண்டு, பொருளாதார விவகாரங்களில் இதுவரை இருந்த ஆண்டுகளிலேயே மிகவும் சவாலான ஆண்டாக இருந்தது.சமீர் ஹஷ்மி 2017-இல் ஏற்பட்ட பொருளாதார நிகழ்வுகள் 2018 மீது எப்படிப்பட்ட தாக்கம் செலுத்தும் என்று கணிக்கிறார்.
    உலகப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய உந்துசக்தியாக இந்தியா இருக்கும் என்று ஓர் ஆண்டுக்கு முன்பு தோன்றியது. பொருளாதார தேக்க நிலையைச் சந்தித்து வந்த சீனாவைவிட அதிக வளர்ச்சி விகிதத்தை அடைந்து, உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு எனும் நிலையை இந்தியா 2016-இல் எட்டியது.



    அந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7%-ஐ விட அதிகமாகவே இருந்தது. ஒரு சமயத்தில் அது 7.9% ஆக இருந்தது.ஆனால், 2017-இல் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், பொருளாதார வளர்ச்சி 5.7%-ஆகச் சரிந்தது. அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் அதுவே குறைந்த வளர்ச்சி விகிதமாகும்.இரண்டு விடயங்கள் 2017-இல் இந்தியப் பொருளாதாரம் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலாவது, 2016 இறுதியில் புழக்கத்தில் இருந்த 86% பணத்தை செல்லாது என்று அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களின் பண மதிப்பு நீக்கம். இரண்டாவது, ஜூன் 2017-இல் பல்வேறு மாநில மற்றும் மத்திய வரிகளை நீக்கிவிட்டு, "ஒரே நாடு ஒரே வரி" என்ற நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி.மோடி  தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு 2017 மோசமான செய்திகளை மட்டுமே கொண்டுவரவில்லை. உலக வங்கி வெளியிட்ட தொழில் செய்ய ஏற்ற 100 சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறியது.



    மூடிஸ் தர மதிப்பிட்டு நிறுவனம், 2004-க்கு பிறகு முதல் முறையாக இந்தியாவின் பொருளாதார மதிப்பீட்டை அதிகரித்தது. இந்திய பங்குச் சந்தைகள் முந்தைய ஆண்டைவிட 30% வளர்ச்சி அடைந்தன.
     வாராக்கடன் மற்றும் செயல்படாத சொத்துகளால் தவிக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக ரூபாய் 2.11 லட்சம் கோடி வழங்கப்படும் என்று அறிவித்தது மத்திய அரசு. எனினும், 2018 இந்திய அரசுக்கு ஒரு கடினமான ஆண்டாகவே இருக்கப்போகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad