• சற்று முன்

    சுயேட்சி வேட்பாளர் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது

    சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்திற்கு கடும் போட்டி எழுந்துள்ளது. இதனால், டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட தி.மு.க சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் ஆகியோர் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.






    சுயேச்சை வேட்பாளர்களாக டி.டி.வி தினகரன், நடிகர் விஷால், தீபா ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் தீபா, விஷால் உள்ளிட்ட பல சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இதுவரை 72 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் நிலையில் தொப்பி சின்னம் யாருக்கு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்.கே நகரில் போட்டியிடும் சுயேச்சைகளில் தினகரன் உட்பட 30 பேர் தொப்பி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து உள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே சின்னத்தை கேட்கும்போது, குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும். ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட தேர்தலில் டி.டி.வி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட பிரச்சாரம் மேற்கொண்டதால் இந்த முறை அந்த சின்னம் கிடைத்தால் பிரச்சாரம் எளிதாக இருக்கும் என்பதாலேயே பலரும் அந்த சின்னத்தை கேட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தொப்பி சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்கிற டி.டி.வி தினகரன் வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால், இந்த முறை தொப்பி சின்னம் கிடைப்பதில் தினகரனுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad