Header Ads

  • சற்று முன்

    குஜராத்தில் முதல்கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.


    குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 ஆண்டுகளாக குஜராத்தை பா.ஜ.க ஆட்சி செய்துவருகிறது. ஆனால், இந்தமுறை காங்கிரஸ்க்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளன. இந்தநிலையில், குஜராத் சட்டப்பேரவைக்கான 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் நடைபெறும் இத்தேர்தலில் 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், பா.ஜ.க. சார்பில் முதல்வர் விஜய் ரூபானி ராஜ்கோட் மேற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார்.  

    முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 2.12 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக 24,689 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இதற்காக 27,158 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் கூடிய ரசீது வழங்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2-ம் கட்டத் தேர்தல் 14-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad