பைக்ரேசில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை
சென்னையில் நள்ளிரவில் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், பைக்ரேசில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி, சென்னையில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதுபோன்ற சமயங்களில் இளைஞர்கள், பைக் ரேசில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளதால்கா வல்துறையினர் பல்வேறு இடங்களில் தடுப்பை ஏற்படுத்தி இருந்தனர். போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி, சென்னை கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கானோர் பைக்ரேசில் ஈடுபட்டனர்.
சாந்தோம் சாலை, மயிலாப்பூர்,அடையார் உள்ளிட்ட பகுதிகளில் பைக்ரேசில் ஈடுபட்ட 200 இருச்சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த வாகனங்கள் உரிய ஆவணங்கள் உள்ளனவா என்று விசாரணை செய்யப்பட்ட பின்னரே வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றதாக 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, சென்னையில் பைக்ரேசில் ஈடுபட்ட 4 பேர் படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை