தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஆளுநர் கோவை விஜயம்
கோவை: மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் தமிழக ஆளுநர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் கோவை மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அங்கு மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆனால் எதற்காக ஆலோசனை என்பது குறித்து முழு விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். ஆனால் தனது அதிகாரத்திற்கு உட்பட்டே ஆளுநர் செயல்படுவதாகவும், அதற்கு சட்டத்தில் இடமுண்டு என்று மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை