Header Ads

  • சற்று முன்

    மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானி


    மக்கள் நெரிசல் மிகுந்த இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள பெட்டி போன்ற அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விமானம் ஒன்றை தயாரிக்க போவதாக 7 ஆண்டுகளுக்கு முன்னரே அமோல் யாதவ் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்தார்.
    விமானத்தை தயாரித்த பிறகு கீழே கொண்டு வருவதற்கு எப்படி திட்டமிட்டிருக்கிறாய் என்று அவரது கூற்றை நம்பாத நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் இந்த இளம் விமானியிடம் கேட்டனர்.
    தன்னுடைய வாழ்க்கைக்காக இரட்டை எந்திரமுடைய டர்போபிரோப் விமானங்களை ஓட்டுகின்ற யாதவிடம் இந்த பிடிவாதம் மட்டும் இல்லை என்றால், அவரிடம் எதுவுமில்லை.
    அவருடைய 19 உறுப்பினர்களை கொண்ட கூட்டுக் குடும்பம் வாழும் 5 மாடி கட்டடத்தில் மின்தூக்கி (லிப்ட்) இல்லை. எனவே, கடைசல் எந்திரங்கள், கம்பிரஷர்கள், வெல்டிங் எந்திரங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 180 கிலோ எந்திரம் ஆகியவற்றை மிகவும் குறுகிய படிக்கட்டு பாதை வழியாக மொட்டை மாடிக்கு அவர்கள் கஷ்டப்பட்டு தூக்கி சென்றனர்.
    பிசுபிசுக்கும் கோடைக்காலத்திலும், பருவகால மழையிலும் யாதவும், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர் மற்றும் பாகங்களை ஒன்றிணைப்பவர் என அவருடைய குழுவும் ஒரு டென்னிஸ் மைதானத்தில் பாதி அளவுடைய 1,200 சதுர மீட்டர் கூடாரத்தின் கீழ் வேலை செய்துள்ளனர்.
    கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவருடைய 6 இருக்கை கொண்ட விமானம் தயாராகிவிட்டது.
    யாதவின் கூற்றுப்படி இவ்வாறு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதுபோன்ற முதல் விமானம், இதுதான்.
    இதனுடைய எந்திரம் 13 ஆயிரம் கிலோமீட்டர் உயரம் வரை மேலெழுந்து பறக்கக்கூடியது சக்தியுடையது.
    அதனுடைய எரிசக்தி கலனில் மணிக்கு 185 கடல் மைல் வேகத்தில் பயணித்து 2 ஆயிரம் கிலோமீட்டர் பறக்க தேவையான எரிபொருளை நிரப்ப முடியும்.
    அந்த மொட்டை மாடியின் இடத்திற்குள் பொருந்துவதாக அந்த விமானம் இருக்கவில்லை. அந்த விமானத்தின் வால் பகுதி பக்கச்சுவரை தாண்டி புகைமூட்டமுள்ள வான்பரப்பில் புடைத்து வெளியே நீண்டி கொண்டிருந்தது.
    "இப்போது இந்த விமானத்தை மொட்டை மாடியில் இருந்து கீழே கொண்டு சென்று மக்களிடம் காட்ட வேண்டும் என்று 41 வயதாகும் யாதவ் அவருடைய வீட்டில் வைத்து பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
    மும்பையில் உலக பொருட்களின் தயாரிப்பு முனையத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு முன்முயற்சிக்கு பின்னால், ஒரு மாபெரும் இந்திய தயாரிப்பு கண்காட்சியை அரசு நடத்தி வருகிறது.
    இதனை ஏற்பாடு செய்வோரிடம் தன்னுடைய விமானத்தை காட்சியில் வைப்பதற்கு அனுமதி கேட்டபோது, அங்கு இடமில்லை என்றுகூறி, அவர்கள் மறுத்துவிட்டனர்.
    மும்பையின் மேற்கிலுள்ள பாந்திராவில் மாநாடுகள் நடைபெறும் திடலுக்கு சென்ற அவருடைய சகோதரர்கள், இந்த விமானத்தை காட்சிக்கு வைக்கக்கூடிய இடத்தை கண்டுபிடித்தனர்.
    தாயகத்தில் தயாரிக்கப்பட்ட விமானத்தை காட்சிக்கு வைப்பதால் கிடைக்கக்கூடிய முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி பாதுகாப்பு பணியாளர்களை ஏற்றுகொள்ளவதற்காக அவருடைய சகோதரர்கள் உரையாடினர்.
    "எனவே, இந்த விமானத்தை உலகிற்கு காட்டுவதற்கு ஒரே நாளிரவில் அந்த விமானத்தை பிரிக்க முடிவு செய்தோம்" என்கிறார் யாதவ். .
    ஒரு நாள் மாலையில், யாதவும், அவருடைய குடும்பத்தினரும் அந்த விமானத்தை பிரித்தனர்.
    எந்திரம், இறக்கை, வால் மற்றும் உடற்பகுதியை அவர்கள் அகற்றினர். எந்திர பாகங்களை தூக்குவதற்கு அவர்கள் மொட்டை மாடியில் பொருத்தியிருந்த கிரைனை பயன்படுத்தி பிரித்த விமான பாகங்களை டிரக் நின்று கொண்டிருந்த சாலைக்கு இறக்கினர். அண்டை வீட்டுக்காரர்கள் பெருங்கூட்டமாக அங்கு குவிந்தனர்.

    ஒரு சமயம் கிரேன் தடங்கலுக்கு உள்ளானது. 30 மீட்டர் நீள விமானத்தின் உடல் பகுதி கீழே இறக்கப்படும்போது, நடுவழியில் தொங்கியது.
    "எனக்கு மாரடைப்பே வந்துவிடும் போலிருந்தது. கிரேன் உடைந்துவிடும், விமானத்தின் உடல்பகுதி சாலையில் விழும் என்று எண்ணினோம். சில நிமிடத்திற்கு பின்னர், கிரேன் மீண்டும் வேலை செய்ய தொடங்கியது. எல்லாம் நன்றாக முடிந்தது" என்றார் யாதவ்
    பிரிக்கப்பட்டிருந்த விமானம் மெதுவாக சேர்க்கப்பட்டன. நள்ளிரவில், நகரின் வெறுமையாக கிடந்த சாலையில் கொண்டு செல்லப்பட்டது. விமானத்தின் உடல் பகுதி வாகனம் ஒன்றால் கட்டி இழுக்கப்பட்டு 25 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கண்காட்சி மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    அங்கே, பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை உள்ளே அனுமதித்தனர். யாதவும், அவருடைய தொழில்நுட்ப பணியாளர்களும் ஆணையிட இந்த அணி 3 மணி நேரத்திற்குள் அந்த விமானத்தை பொருத்திவிட்டது.
    சில மணிநேரங்களில் தொடங்கிய கண்காட்சியில். பெவிலியனுக்கு அருகிலுள்ள வெற்றிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த விமானம், ஆர்வமுள்ள பார்வையாளர்களை ஈர்க்க தொடங்கியது.
     மக்கள் கூட்டம் இந்த விமானத்திற்கு சுயப்படம் எடுத்துகொள்ளும் அலைகடல் பார்வையாளர்களை கொண்டதாக மாறியது.
    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம்
    அடுத்த 15 மாதங்களுக்கு மேலாக இந்த விமானம் அருகிலுள்ள கோவில் கோட்டையில் கிடந்தது. விமானக் கண்காட்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மும்பை விமான நிலையத்திற்கு வெளியே கொள்கலன் டிரக்கில் நின்று கொண்டிருந்தது.
    மே மாதம் இது மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தப்பியோடிய பில்லினியருக்கு சொந்தமான தனியார் ஏர்பஸ் விமானத்திற்கு அடுத்ததாக நிறுத்தி வைக்கப்பட்டது.
    வணிக ரீதியிலான இந்தியாவின் முதலாவது உள்நாட்டு தயாரிப்பு விமானங்களை தயாரிக்க இப்போது தயாராக இருப்பதாக யாதவ் தெரிவித்துள்ளார்.
    முதலீட்டாளர்களும் இதில் ஆர்வம் காட்டியுள்ளனர். உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி அரசு 19 இருக்கைகள் உடைய விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைக்க 157 ஏக்கர் நிலம் வழங்க வாக்குறுதி அளித்துள்ளது.

    5 ஆண்டுகளில் அவருடைய மூன்றாவது விமானத்தை தன்னுடைய வீட்டின் மாடியில் அவர் தயாரித்தார்.
    இன்னும் ஓராண்டில் 19 இருக்கைகள் உடைய விமானத்தின் மாதிரியை உருவாக்க மீண்டும் வீட்டின் மொட்டை மாடிக்கே அவர் திரும்பியுள்ளார்.
    தன்னுடைய கனவை நனவாக்க அவர் தன்னுடைய மற்றும் அவருடைய குடும்பத்தினரின் 8 லட்சம் டாலரை செலவிட்டுள்ளதோடு, சொத்துக்களை விற்றுள்ளார். குடும்ப அணிகலன்களை அடமானம் வைத்துள்ளார்.
    என்னை போன்ற பொது மக்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் இந்தியாவில் ஒரு பொருட்டாக கண்டுகொள்ளப்படுவதில்லை. என்னை விமானத்தில் பறக்க அனுமதித்தால், இந்தியாவில் விமான தயாரிப்பு வரலாற்றை உருவாக்குவேன் என்கிறார் யாதவ் நம்பிக்கையுடன்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad