இந்திய பிரதமர் மோடியை புகழ்ந்த டிரம்ப்
புதுடெல்லி: வியட்நாம் சுற்றுப் பயணத்தில் இந்தியாவையும், பிரதமர் மோடியையும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெகுவாக புகழ்ந்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தென்கொரியா, ஜப்பான் பயணத்தை ஏற்கனவே முடித்து விட்டு சீனா வந்த டிரம்ப், அங்கு 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று அவர் சீனாவில் இருந்து புறப்பட்டு வியட்நாம் சென்றார். இங்குள்ள தனாங் நகரில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்றார். இதில் பேசிய டிரம்ப், இந்தியாவையும் பிரதமர் மோடியையும் வெகுவாக புகழ்ந்தார். அதன் விவரம் வருமாறு;
தனது பொருளாதாரமயமாக்கலை எப்போது இந்தியா திறந்து விட்டதோ அப்போது முதல் இந்த ஆச்சர்யம் அளிக்கும் வளர்ச்சி தொடங்கி விட்டது. நடுத்தர மக்களுக்கும் புதிய உலகம் கிடைக்கக்கூடிய வாய்ப்பை இந்த விரிவாக்கம் ஏற்படுத்தி கொடுத்து விட்டது. எனவே, அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட பிரதமர் மோடி கடுமையாக பணியாற்றி, அதில் வெற்றியும் அடைந்து விட்டார். இவ்வாறு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். வியட்நாம் பயணத்தை முடித்த பிறகு, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு டிரம்ப் செல்கிறார்.
கருத்துகள் இல்லை