Header Ads

  • சற்று முன்

    சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


    சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    சிவகாசியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். தற்போது நகராட்சியாக உள்ள சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படும் என்றும், அதனுடன் திருத்தங்கல் நகராட்சி மற்றும் சித்துராஜபுரம், விஸ்வநத்தம் உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளும் இணைக்கப்படும் எனவும் தெரிவித்தார். சிவகாசி நகரத்திற்கு புறவழிச்சாலை விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகரத்திற்கு 33.48 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சாலை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

    இதற்கான நில எடுப்புப் பணிகள் 82 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அருப்புக்கோட்டை நகராட்சிக்கு 35 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் தொகை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், பந்தல்குடி அரசு மருத்துவமனைகளில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad