கொடுங்கையூரில் தீ விபத்தில் ஒரே டும்பதை சேர்ந்தவர்கள் பலி !!!
கொடுங்கையூரில் தீ விபத்தில் ஒரே டும்பதை சேர்ந்தவர்கள் பலி !!!
சென்னை: கொடுங்கையூர் தீ விபத்தில் ரயில்வே ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்தவர் வெங்கடபிரகாஷ். ரயில்வே ஊழியரான இவருக்கு கீதா என்ற மனைவியும் சர்மிளா என்ற 24 வயது மகள் மற்றும் 20 வயதில் கிஷோர் என்ற மகனும் இருந்தனர்.கடந்த 23 ஆம் தேதி அதிகாலையில் எழுந்த வெங்கடபிரகாஷ், வீட்டில் மின் விளக்கு சுவிட்சை போட்டார். அப்போது சமையல் கியாஸ் கசிவு ஏற்பட்டு கியாஸ் பரவி இருந்ததால் தீப்பிடித்து வீடு முழுவதும் எரிந்து நாசமானது.கருகிய நிலையில் அனுமதி இந்த தீ விபத்தில் வெங்கடபிரகாஷ், கீதா, சர்மிளா, கிஷோர் ஆகிய 4 பேரும் உடல் கருகினர். ஆபத்தான நிலையில் அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மனைவி உயிரிழப்பு ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி மறுநாள் காலை கீதா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.பலி எண்ணிக்கை உயர்வு இந்தநிலையில் நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி கிஷோர், சர்மிளா இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
குடும்பமே பலியானது வெங்கடபிரகாஷ் மட்டும் உயிருக்கு போராடி வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் வெங்கட பிரகாஷும் உயிரிழந்தார். தீ விபத்தில் குடும்பமே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை