குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

சிப்காட்டிற்காக கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் எங்களிடமே ஒப்படைக்க வேண்டும்- கிராம மக்கள் மனு

காஞ்சிபுரம் மாவட்ட  கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய...

 

காஞ்சிபுரம் மாவட்ட  கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீயிடம்  தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எச்சூர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மனுவை அளித்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள எச்சூர்-ஏ மற்றும் எச்சூர்-பி  கிராமங்களில் சிப்காட் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், இதுவரை திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றும், நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று கிராம மக்கள்  தெரிவித்துள்ளனர். விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட தங்களிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால், சுமார் 800 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். தற்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பயன்பாடின்றி இருப்பதாகவும், விவசாயம் செய்ய நிலமின்றி தவித்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட  கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய...


“எங்களுக்கு இழப்பீட்டுத் தொகை முக்கியமல்ல; எங்கள் நிலம்தான் முக்கியம். சிப்காட் திட்டத்திற்காக எடுத்த நிலத்தை மீண்டும் எங்களிடமே ஒப்படைக்க வேண்டும்” என கிராம மக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக ஏற்கெனவே நான்கு முறை மாவட்ட வருவாய் அலுவலர் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர்கள், அடுத்த முறையும் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் கோட்டைக்கு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை