கடந்த 20 ஆண்டுகளாக வடசென்னை பகுதியான, திரு ஒற்றியூரில், செயல்பட்டு வரும், இந்த அம்மையப்பர் சேவை மையம், மகப்பேறு மருத்துவமனை முதல், மயானம் வரை, இடையில் இருக்கும் அனைத்து செயல்பாடுகளையும், செவ்வண நிறைவேற்றி வருகிறது, என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் ,மேலும் இந்த நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5,000 பேருக்கு மேல், தமிழகம் மற்றும் அனைத்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும், உறுப்பினராக இருக்கிறார்கள், என்பதை பெருந்தன்மையுடன் சொல்லுகிறோம்,
இன்றைய காலகட்டங்களில் நடைபெறும், அனைத்து பொதுநிகழ்ச்சிகளையும், மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கக்கூடிய நிறை, குறைகளையும், நிவர்த்தி செய்து7 அதற்கு உரிய அதிகாரிகளை சந்தித்து, அதை சரி செய்து கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கம், வாழ்க்கையை பல இன்னல்களை சந்தித்து, சோகத்தின் உச்சிக்கே சென்ற சில நபர்கள் ,இந்த அமைப்பின் உறுப்பினரான பிறகு, இன்று நல்ல மன நிம்மதியுடன், செயல்பட்டு வருகின்றனர்,
இந்த அமைப்பின் நோக்கமே, பணக்காரர், ஏழை, என்ற பாகுபாடு இல்லாமல், அனைவரையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மையுடன் இருக்க, வழி வகுத்து செயல்படுவதே இதன் நோக்கம், இந்த வருட ஆயுத பூஜை நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக, சிறப்பான முறையில் நடைபெற்றது ,கலந்து கொண்ட அனைவருக்கும், இனிப்பும் ,மற்றும் கைப்பையுடன், இணைந்த பரிசு பொருட்களும் தரப்பட்டது, இதனை நிறுவ வைத்து வரும் திரு ஏ .சி .எல். எஸ். சீனிவாசன், அவர்கள் தலைவராகவும், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் நவஜீவன், மற்றும் மருத்துவர், முதல் மயானத்தில் வேலை செய்பவர்கள் வரை உறுப்பினர்களாக, இருப்பதை நாங்கள் பெருமை கொள்கிறோம், மேலும் பல நூற்றாண்டு இது தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே, பிற்காலத்தில் வருகின்றவர்களை செயல்படுத்தப்படுவார்கள் என்பது, எங்களுடைய விரிவாக்கமும், நோக்கமும் ,வணக்கம் என்றும் அன்புடன், ஊடக செயலாளர், அம்மையப்பர் சேவை மையம்.