காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அடுத்த தாத்திமேடு வழியாக லாரிகளில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக சிவ காஞ்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வரைந்த சிவாஞ்சி போலீசார் ஆற்று மணலை கடத்தி வந்த நான்கு டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். போலிசார் சோதனையில் ஆற்று மணல் கடத்தி செல்வது செய்யப்பட்ட நிலையில் லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். போலிசாரை கண்டதும் லாரியின் ஓட்டுனர்கள் லாரியை விட்டு விட்டு தப்பியோட்டம் தப்பியோடிய லாரி ஓட்டுனர்களை சிவ காஞ்சி தேடி வருகின்றனர். மணல் திருட்டில் மாட்டிக் கொள்ளாத வண்ணம் புஷ்பா திரைப்பட பாணியில் லாரி முழுவதும் ஆற்று மணல் நிரப்பப்பட்ட நிலையில் லாரியின் மேற்பரப்பில் மட்டும் கட்டிடங்களில் இடிக்கப்படும் ரப்பிஸ் வகைகளை நிரப்பி எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.