இந்தியா முழுவதும் உள்
ள பாப்திஸ்து பிரதரன் உள்ளிட்ட சுவிசேஷத் திருச்சபைகளின் நலனுக்காகச் செயல்பட்டு வரும் பாப்திஸ்து பிரதரன் மற்றும் நற்செய்தித் திருச்சபைகளின் மாமன்றத்தின் (SBBEC) தலைமைப் பேராயராக, கிருபை சுவிசேஷ பாப்திஸ்து திருச்சபையின் போதகர் பேரருட்திரு. ஜெ. டேவிட் தன்ராஜ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2026 அக்டோபர் 24 அன்று திருநிலைப்படுத்தப்பட்டார். சென்னை சேத்துப்பட்டு தமிழ் பாப்திஸ்து திருச்சபையில் நடைபெற்ற திருநிலைப்பாட்டு ஆராதனையில், மாமன்றத்தின் பொதுச் செயலாளர் முனைவர் என். ஜோசுவா ஜெயசீலன் அவர்களின் முன்மொழிவின்பேரில், மாமன்றத்தின் பொருளாளர் பொன் வ. கலைதாசன் அவர்களின் முன்னிலையில், இந்திய சுவிசேஷத் திருச்சபையின் ஓய்வுபெற்ற பிரதமப் பேராயர் பேரருட்திரு. டேவிட் ஒநேசிமு அவர்கள் திருநிலைப்படுத்தி, தலைமைப் பேராயராகப் பொறுப்பேற்கச் செய்தார். கல்வி, சமூகப்பணி, எழுத்துப்பணி பேரருட்திரு. டேவிட் தன்ராஜ் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் (M.A.), சென்னை இறையியல் கல்லூரியில் இறையியலில் இளங்கலைப் பட்டமும், டே ஸ்பிரிங் (Day Spring) பல்கலைக்கழகத்தில் இறையியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக நிவாரணப் பணிகளிலும் சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் சமூகப் பிரச்சினைகளையும் நிகழ்வுகளையும் அணுகி, அவை குறித்த கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதி வருகிறார். ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் திகழும் இவர், இதுவரை ஐந்து நூல்களையும் எழுதியுள்ளார்.
மாமன்ற நிர்வாகிகள் பங்கேற்பு
இந்தத் திருநிலைப்பாட்டு ஆராதனையில் மாமன்றத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு திருச்சபைகளின் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். புதிய தலைமைப் பேராயரின் தலைமையில் மாமன்றத்தின் பணிகள் தொடர்ந்து வளரவும், பல்வேறு திருச்சபைகளின் ஐக்கியமும் ஒத்துழைப்பும் வலுப்பெறவும் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.