தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வேலூர் வீட்டு வசதிப் பிரிவிற்கு உட்பட்ட காஞ்சிபுரம் திட்டப் பகுதியில், ஹவுசிங் போர்டு, பல்லவன் நகரில் 83 அதி நவீன வசதிகள் கொண்ட உயர்வருவாய் குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூண்/தளம் மற்றும் 12 தளங்களைக் கொண்ட இந்தக் குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மாவட்ட வருவாய் அலுவலர் (திட்டம்) திருமதி சௌந்தர்யா, நிதி ஆலோசகர் திரு. தரணிபாபு, தலைமைப் பொறியாளர் (ஊரகம்) திரு. ஆர். சரவணன் மற்றும் சேலம் சரக கண்காணிப்புப் பொறியாளர் திரு. கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம், தரம் மற்றும் பணிகளின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வருவாய் அலுவலர் சௌந்தர்யா அவர்கள் கைகளால் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டன
