குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

235 மாற்றுத்திறனாளிகளுக்கு 44.72 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள் - அமைச்சர்கள் வழங்கினர்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர்  சினேகா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்  S.P.K. தென்னரசு அவர்களும், வனத்துறை அமைச்சர்  R.V. ரஞ்சித் குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ALIMCO நிறுவனம் வாயிலாக, Linde தொழில் நிறுவனத்தின் CSR நிதியின் கீழ், 235 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 44.72 லட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிள், சிறப்பு சக்கர நாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, திறன்பேசி, நவீன மடக்கு குச்சி, ஊன்றுகோல், வாக்கர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி தொகுப்பு போன்ற உதவி உபகரணங்களை அமைச்சர்கள் வழங்கினர்.



அமைச்சர் தென்னரசு பேசுகையில்:

"வாழ்க்கையில் நம்பிக்கை வேண்டும். நாம் சாதிப்பதற்காகவே பிறந்துள்ளோம். முதலமைச்சர் உங்களுக்காகவே பணி செய்ய வந்துள்ளார். ஆகையால் நீங்கள் ஒருபோதும் எந்தவித திட்டங்களையும் அரசிடம் கேட்பதற்கு தயங்க வேண்டாம். தைரியமாக கேளுங்கள். இது உங்களுடைய ஆட்சி" என்று பேசினார். இந்நிகழ்வில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ. முனிரத்தினம், அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், தனியார் நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை