• சற்று முன்

    ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா சம்ரோக்ஷணம் கும்பாபிஷேகப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது


    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஆயர்பாடி கிராம பகுதியில்  அருள்மிகு ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் மற்றும் ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா சம்ரோக்ஷணம் கும்பாபிஷேகப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில்

    முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் ,  பேரூராட்சி மன்ற உறுப்பினர் லயன் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தரிசனம் பெற்ற  இந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். கடந்த 22 தேதி 2  நாட்களுக்கு முன்னதாக யாக சாலை பூஜையில் வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கணபதி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் தொடங்கப்பட்ட இந்த கும்பாபிஷேகத்தில், கங்கை, யமுனை, வைகை, கோதாவரி, நர்மதா, காவிரி,  தென்பெண்ணை, தாமிரபரணி, உள்ளிட்ட மிக முக்கிய ஆறுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலச புறப்பாடு  விண்ணை பிளக்கும் வான வேடிக்கைகளுடனும், மங்கள  வாத்தியங்களுடனும் சென்று பின்னர் ராஜ கோபுரத்தில் உள்ள கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, தீப தூப ஆராதனை காண்பித்து, இன்றைய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற

    இந்த கும்பாபிஷேக விழாவில், அக்ரி நாகராஜன், சிவக்குமார், புருஷோத்தமன், தனசேகர், லோகநாதன், மோகன், வெங்கடேசன், தயாளன், செந்தில்குமார், சதீஷ், செந்தில். உள்ளிட்ட  கோவில் நிர்வாக குழுவினர் பலர் கலந்து கொண்டனர்....

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad