குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் கங்கை அம்மன் கோயிலில் திருட முயன்ற இருவர் கைது – செம்பு பூஜைப் பொருட்கள் பறிமுதல்!



திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் ஊராட்சியில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் புகுந்து பூஜைப் பொருட்கள் மற்றும் கோயில் பாத்திரங்களைத் திருட முயன்ற இருவரை உமராபாத் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கங்கை அம்மன் கோயிலுக்குள் புகுந்த இருவர், அங்கிருந்த செம்பு மணி, பஞ்சபாத்திரம், தட்டு உள்ளிட்ட பூஜைப் பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்தபோது அப்பகுதி பொதுமக்கள் அவர்களைப் பார்த்து, யார் எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்களைச் சோதனை செய்தனர். அப்போது திருட முயன்ற செம்புப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் உமராபாத் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆம்பூர் அடுத்த பி.கஸ்பா, அன்னை சத்யா வீதியைச் சேர்ந்த முகமது அலியின் மகன் அப்துல்லா (29), பி.கஸ்பா ராமாபாய் தெருவைச் சேர்ந்த சார்லஸ் அன்னையின் மகன் நவயோகன் (29) ஆகிய இருவரும் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த உமராபாத் போலீசார், அவர்களிடமிருந்து திருட முயன்ற செம்பு மணி, பஞ்சபாத்திரம், தட்டு உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்

கருத்துரையிடுக

புதியது பழையவை