குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

இராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வேளாண் மாணவிகள்!



தக்கோலம், இராணிப்பேட்டையில் அமைந்துள்ள தொன் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த வேளாண் மாணவிகள், 13.11.2026 அன்று கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்குக் கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் களப்பணியில் ஈடுபட்டு வரும் மாணவிகள், வேளாண்மைத் துறையின் நிர்வாகச் செயல்பாடுகள், அரசு நலத்திட்டங்கள் மற்றும் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் நோக்கில் வேளாண்மை இணை இயக்குநர் திரு. சுந்தரம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின்போது, வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு வேளாண் நலத்திட்டங்கள், நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், அலுவலகப் பதிவேடுகள் பராமரிப்பு முறைகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், ஆண்டுதோறும் வேளாண் பயிர்களின் உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் சாகுபடிப் பரப்பளவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தார். விவசாயிகளின் நலனுக்காக அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு உதவிகள் மற்றும் திட்டங்களை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து, காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் களப்பணியின்போது விவசாயிகளிடம் மாணவிகள் கேட்டறிந்த வேளாண்மை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை வேளாண்மை இணை இயக்குநரிடம் முன்வைத்து, அவற்றுக்கான விளக்கங்களைப் பெற்றனர்.

மேலும், விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு செயல்விளக்க நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதாகவும், அவற்றில் விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்று நவீன தொழில்நுட்பங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

வேளாண் துறையின் வளர்ச்சியிலும், அரசு நலத்திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதிலும் வேளாண் மாணவர்களின் பங்கு முக்கியமானது என்பதை இச்சந்திப்பு எடுத்துரைத்தது. இக்கல்விச் சுற்றுப்பயணம் மாணவிகளுக்கு வேளாண் நிர்வாகம், அரசு நலத்திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கான சேவைகள் குறித்த நடைமுறை அறிவைப் பெறுவதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

கருத்துரையிடுக

புதியது பழையவை