குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் மேலாண்மை இயக்குநர் சு.அமிர்த ஜோதி காகித கூழ் பொம்மை கைவினைப் பொருட்களுக்கான பயிற்சியை துவக்கி வைத்தார்.



தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் மேலாண்மை இயக்குநர் சு.அமிர்த ஜோதி காகித கூழ் பொம்மை கைவினைப் பொருட்களுக்கான பயிற்சியை துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் நவ 13, காஞ்சிபுரம் மாநகராட்சி, வேகவதி தெரு, SSP பாவனா ஹாலில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காகிதக்கூழ் பொம்மை கைவினைத் தொழிலுக்காக குரு சிஷ்யா கைவினைப்பொருட்கள் பயிற்சித் திட்டம் மற்றும் இலவச கண் பரிசோதைனை முகாமினை தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் மேலாண்மை இயக்குநர், சு.அமிர்த ஜோதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.



ஒன்றிய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அபிவிருத்தி ஆணையம் (கைவினைப் பொருட்கள்) அலுவலகம், புது தில்லி, தமிழ்நாட்டின் 13 இடங்களில் குரு - சிஷ்யா கைவினைப்பொருட்கள் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்திற்கு ரூ.96.87 இலட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரம்பரிய காகிதக்கூழ் பொம்மை கைத்திறத் தொழிலுக்காக, குரு சிஷ்யா கைவினைப்பொருட்கள் பயிற்சித் திட்டத்தின் (Guru Shishya Hastshilp Prashikshan Program - GSHPP) கீழ் காஞ்சிபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த 30 கைவினைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இரண்டு மாத காலத்திற்கு காகிதக்கூழ் பொம்மை கைத்திறத் தொழிலில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது பாரம்பரிய கைவினைத் திறன்களை அனுபவமிக்க முதன்மை கைவினைஞரிடமிருந்து அடுத்த தலைமுறை கைவினைஞர்களுக்குப் கொண்டும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியின்போது கைவினைஞர்களுக்கு தொழில்நுட்பத் திறன், புதிய வடிவமைப்பு முறைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய கைவினைக் கலையைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடையே இத்தொழிலின் மீதான ஆர்வத்தை உருவாக்குவதுடன், அவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.300/- ஊக்கத்தொகை வழங்கப்படும்.மேலும், கைவினைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தி, தொடர்ந்து சுயமாகத் தொழில் மேற்கொள்ளவும், வருவாயை அதிகரிக்கவும் இப்பயிற்சியில் பங்கேற்கும் 30 கைவினைஞர்களுக்கு இலவசமாகத் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து,கைவினைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பூம்புகார் நிறுவனம், சங்கர நேத்ராலயாவுடன் இணைந்து 120 கைவினைஞர்களுக்கான இலவசக் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பயிற்சித் திட்டங்கள், உபகரணங்கள் மற்றும் கண்பரிசோதனை முகாம் மூலம் தமிழ்நாட்டின் கைவினைஞர்கன் நலனை பாதுகாப்பதுடன், பாரம்பரிய கைவினைக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்கும், கைவினைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கும் முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வா.ச.வெங்கடேசன், உதவி இயக்குநர் ஹஃபுல் ஹசன், (வளர்ச்சி ஆணையர் கைவினைப் பொருட்கள், சென்னை) சங்கர நேத்ராலியா டாக்டர் ஜனனி மற்றும் கைவினைஞர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை