குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஸ்டார் பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி உணவுத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம், தேவலாபுரத்தில் உள்ள ஸ்டார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு உணவுத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.



இந்த உணவுத் திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளைத் தாங்களே தயாரித்து வந்து காட்சிக்கு வைத்திருந்தனர். உணவுகளின் சிறப்புகள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

இவ்விழாவிற்கு ஸ்டார் பள்ளியின் தாளாளர் எஸ். சுப்ரமணி, பள்ளி நிர்வாகி எஸ். சுபஸ்ரீ, தலைமை ஆசிரியர் செல்வி பி. ஜெயசுதா ஆகியோர் தலைமை தாங்கி, ஆசிரியர்களுடன் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் குணசேகரன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் கருணாகரப்பிள்ளை, சரோஜினி மற்றும் தலைமை ஆசிரியர்கள் சபாரத்தினம், கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மாணவர்கள் தயாரித்து வைத்திருந்த பாரம்பரிய உணவுகள் மற்றும் சிறுதானிய உணவு வகைகளைப் பார்வையிட்டு, சுவைத்து மாணவர்களின் முயற்சிகளைப் பாராட்டினர். மேலும், அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை