குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஆம்பூரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நலச்சங்கக் கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!



திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் ஆம்பூர் கிளைக் கூட்டம்  உமர்சாலை நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கிளைத் தலைவர் கே.எஸ். உமாபதி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் டி. மணிவண்ணன் முன்னிலை வகித்தார். கிளைச் செயலர் எஸ். ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு கிராம வங்கி, ஆம்பூர் கிளை மேலாளர் கோமதி, வங்கியில் செயல்படுத்தப்படும் சிகரம் திட்டம் குறித்து விளக்கிப் பேசினார். உறுப்பினர் ஆ. சந்திரகாந்தா பயன்தரும் மருத்துவக் குறிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

நிதிச்சட்டம் 2025 தொடர்பாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் நிதிப் பயன்களைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு விலகும் முடிவைத் திரும்பப் பெற்று, ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் அனைத்து நிதிப் பலன்களையும் வழக்கம்போல் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.

பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், காலை மற்றும் மாலை நேரங்களில் பொழுதுபோக்கவும் நகராட்சி இடத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர் சங்கங்களும் அறிவிக்கும் கூட்டு போராட்டங்களில் சங்க உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும். கூட்டத்தின் நிறைவில் பொருளாளர் ஜி. கலியமூர்த்தி நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை