குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் நடத்தி வைத்தார்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு  அமைச்சர்  ஆர்.வி.ரஞ்சித்குமார் நடத்தி வைத்தார்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் நடத்தி வைத்தார் - கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு அமைச்சர்  ஆர்.வ...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு அமைச்சர்  ஆர்.வி.ரஞ்சித்குமார் நடத்தி வைத்தார் !

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு  அமைச்சர்  ஆர்.வி.ரஞ்சித்குமார் நடத்தி வைத்தார்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் நடத்தி வைத்தார் - கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு அமைச்சர் ஆர்.வி...

 


காஞ்சிபுரத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கி, சமுதாய வளைக்காப்பை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் நடத்தி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக நலத்துறை அலுவலர்கள் மூலம் 200 கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளதாக கணக்கெடுத்தனர். இவர்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நடத்த வேண்டும் என,  வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது. 

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு  அமைச்சர்  ஆர்.வி.ரஞ்சித்குமார் நடத்தி வைத்தார்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் நடத்தி வைத்தார் - கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு அமைச்சர் ஆர்.வி...

 

அதன்படி இதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் சினேகா முன்னிலை வகித்தார்.  சமூக நலத்துறை பெண் ஊழியர்கள் மூலம், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் சந்தனம் பூசி, சமுதாய வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார், கலெக்டர் சினேகா ஆகியோர், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் பட்டுசேலை மற்றும் சீர்வரிசைகளை வழங்கினர். இதுதவிர அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் இரண்டு தென்னங்கன்றுகள், இரண்டு தேக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது. 

இறுதியில் அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் கர்ப்பிணி தாயிமார்களுடன் அமர்ந்து மதிய உணவை அருந்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர்கள், கர்ப்பிணி தாய்மார்களின் உறவினர்கள் த.வெ.க., பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை