• சற்று முன்

    இணையத்தில் வந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த ரஜினி



    தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நான் ஸ்டாலின் அவர்களை சந்தித்து அவருடன் பேசினேன். திமுக தோல்வி எனக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி என்பது சகஜம். ஸ்டாலின் எனக்கு 40 ஆண்டு கால நட்பு. அரசியல் கொள்கைகள் வேறு, நட்பு என்பது வேறு. நட்பின் அடிப்படியில் சந்தித்தேன்.

     விஜய் வெற்றி பெற்றவுடன் என்னுடைய எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தேன்.விஜய் அவர்கள் முதல்வரானது எனக்கு பொறாமை கிடையாது. நான் அரசியலிலே கிடையாது. ஒரு வேலை கமல் வந்திருந்தால் பொறாமை வந்திருக்குமோ எனக்கு தெரியாது. அப்பகூட எனக்கு பொறாமை வராது.

    எனக்கும் விஜய்க்கும் 25 ஆண்டுகள்  தலைமுறை இடைவெளி சிறு குழந்தை முதல் அவரை பார்த்து வருகிறேன்.அவர் முதல்வரானது மகிழ்ச்சியே அவர் வெற்றிக்கு திரை துறை பெண்கள்,இளைஞர்கள்,சமூக ஊடகம் அணைத்தும் சாதகமாக இருந்தது. கமல் விஜய்யை சந்தித்து திரைத் துறை சார்பாக  6 கோரிக்கைகள் வைத்துள்ளார். எனக்கு எந்த ஆட்சேபனை கிடையாது. திமுக அதிமுக கூட்டணி வைக்க நான் பேசியது கிடையாது. அவ்வாறு தரம் கெட செயலை நான் செய்ய மாட்டேன். தமிழகத்தில் மாற்றம் எதிர்பார்த்த நிலையில் 60 ஆண்டுகால திரவிட ஆட்சியை எதிர்த்து தனியாளா நின்று வெற்றி பெற்று இருக்கிறார்.  மக்கள் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.அவர்க்கு 2 ஆண்டு கால அவகாசம் தேவைப்படும் நிச்சியம் செய்வர்.2006 நான் தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சியம் வெற்றி பெற்றுயிருப்பேன் அதில் சந்தேகமில்லை. 52 வயதில் முதல்வரானது குறிப்பிடத்தக்கது


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad