வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபிஸர்ஸ் லைன், தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே, அஞ்சல் துறையின், மத்திய மாநில சங்க கூவளுக்கிணங்க FNPO–NUPE சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் கோட்டத் தலைவர் என். ராஜ்குமார் தலைமையிலும், கோட்ட செயலாளர் மோகன்ராஜ், தோழமை சங்கம் ஏ ஐ ஜி டி எஸ் யு ஆர் செல்வகுமார், கோட்ட செயலாளர் என் யு ஜி டி எஸ் ஜி.திருவேங்கடம், துணைச் செயலாளர் ஒடுகத்தூர் ஆடலரசன் ஆகியோர் முன்னிலையிலும் வேலூர் தலைமை அஞ்சலக கூடுதல் பணிகள் குறித்த எட்டு அம்ச கோரிக்கைகளை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
FNPO–NUPE அஞ்சல் ஊழியர்களை இலக்கு வைத்து துன்புறுத்துவதை கைவிட வேண்டும், IDC/CDC முறையை கைவிட்டு பழைய Pincode முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், Nodal Delivery Center-ஐ மேம்படுத்த வேண்டும், Postman பணிநிலை மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டியும், மேலும், Rule–38 அடிப்படையில் பணி மாற்றல்களை அனுமதிக்க வேண்டும், Marketing & Incentive பணிகளை Time Factor முறைக்கு கொண்டு வர வேண்டும், தனியார் நிறுவனப் பணிகளை அஞ்சல் ஊழியர்களிடம் வழங்குவதை நிறுத்த வேண்டும், தேவையற்ற Circle மற்றும் Division பிரிப்பு, இணைப்புகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.