குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

கனிம வளக் கொள்ளையைத் தடுத்து அரசு கஜானாவிற்கு வருவாய் ஈட்டும் அரசு – காஞ்சி தீனன்

கனிம வளக் கொள்ளையைத் தடுத்து அரசு கஜானாவிற்கு வருவாய் ஈட்டும் அரசு – காஞ்சி தீனன்
கனிம வளக் கொள்ளையைத் தடுத்து அரசு கஜானாவிற்கு வருவாய் ஈட்டும் அரசு – காஞ்சி தீனன் - “கனிம வளக் கொள்ளைகளைத் தடுத்து, அரசின் கஜானாவிற்கு நேரடியாக ...

 

“கனிம வளக் கொள்ளைகளைத் தடுத்து, அரசின் கஜானாவிற்கு நேரடியாக வருவாயை ஈட்டும் அரசுக்கு ‘ஸ்டிக்கர் ஒட்டும் அரசு’ என்ற பெயர் கிடைத்துள்ளது” என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் காஞ்சி தீனன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மக்கள் கனிமத் தொழிலை நம்பியுள்ள லாரி உரிமையாளர்கள் பல்வேறு இன்னல்களையும் துயரங்களையும் அனுபவித்து வந்ததாகவும், இதுகுறித்து பல்வேறு போராட்டங்கள் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். தற்போது கனிம வளக் கொள்ளையைத் தடுத்து, கனிம வளத்தின் 100 சதவீத வருவாயையும் அரசு கஜானாவிற்கு கொண்டு செல்லும் வகையில் அரசு முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

மேலும், கனிமத் தொழிலை நம்பியுள்ள லாரி உரிமையாளர்களைப் பாதுகாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். இதற்காக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் கூட்டு இயக்கம் சார்பில் தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும், கனிமவளத் துறை அமைச்சருக்கும், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

கனிம வளக் கொள்ளை தொடர்பாக கடந்த கால ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் அரசு கஜானாவிற்கு வருவாய் எவ்வாறு கிடைத்தது என்பதை விளக்கும் வகையில் வெவ்வேறு நிறங்களில் தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டில்களைக் காட்டி உதாரணம் அளித்தார். கடந்த காலங்களில் ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் அதிகாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் இணைந்து கனிம வளத்தின் பொருளாதாரத்தை எவ்வாறு சீர்குலைத்தனர் என்பதையும் அவர் விளக்கினார்.

தற்போதைய ஆட்சியில் கனிமவளத் துறை அமைச்சர் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், ஒவ்வொரு லாரிக்கும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட லாரிகளுக்கு மட்டுமே கிரஷர்களில் இருந்து லோடு வழங்கப்படுவதால், கனிம வளக் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளதாகவும் காஞ்சி தீனன் தெரிவித்தார்.

கடந்த கால ஆட்சியில் மலைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராடி மீட்டெடுத்த பகுதிகளையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக தற்போது பல்வேறு ஆறுகளில் ஆற்று மணல் படுகை அதிகமாக காணப்படுவதால், ஆற்று மணலைப் பயன்படுத்த அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

“கனிம வளங்களைப் பாதுகாக்கும் அரசாகவும், ஊழல்வாதிகளையும் அரசு அலுவலர்களையும் தடுத்து, கனிம வளத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை மக்கள் கஜானாவிற்கு கொண்டு செல்லும் அரசாகவும் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் ‘ஸ்டிக்கர் ஒட்டும் அரசு’ என்று கூறப்படுவது, ஊழல்வாதிகளைத் தடுக்கும் அரசாகவே பார்க்கப்பட வேண்டும்” என காஞ்சி தீனன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை