குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

மதுரையில் நண்பர்களுடன் மது அருந்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் தலையில் கல்லை போட்டு கொலை


மதுரையில் நண்பர்களுடன் மது அருந்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் தலையில் கல்லை போட்டு கொலை மர்ம நபர்களை தேடும் காவல்துறையினர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சதக்அப்துல்லா(29) இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்துவருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது  இந்த நிலையில் சதக்அப்துல்லா நேற்று பெரியார் பேருந்து நிலையம் அருகே  இரவில் சிலருடன் சேர்ந்து மது அருந்து கொண்டிருந்த போது மது அருந்துவதில் வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென மோதலாக மாறியுள்ளது.

இதனை அடுத்து மது குடித்துகொண்டிருந்த சிலர் சதக் அப்துல்லாவின் தலையில் கல்லை போட்டு தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனால் ரத்தவெள்ளத்தில் கிடந்த நிலையில் அங்குள்ள பொதுமக்கள்  இதனைப் பார்த்து திடிர்நகர் காவல்துறையினருக்கு அளித்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திடீர் நகர் காவல் துறையினர் உடலை பார்த்தபோது சதக் அப்துல்லா தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.