குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் 4 வழிச்சாலையில் கார் மீது வேன் மோதிய விபத்தில் அதிமுக கிளை செயலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

திருப்பரங்குன்றம் அருகே வேடர்புளியங்குளத்தில் வசித்து வந்தவர் முனியாண்டி (வயது 54) அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார்.  இந்த நிலையில் முனியாண்டி தனது காரை ஓட்டியபடி இன்று மாலையில் திருநகரில் இருந்து வேடர்புளியங்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இதேவேளையில் மதுரை திருமங்கலத்தில் இருந்து சமயநல்லூரை நோக்கி கொரியர் சர்வீஸ் வேன் வந்தது. தேனியை சேர்ந்த டிரைவர் சிவா (38) வேனை ஓட்டிவந்தார். திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் அருகே உள்ள நான்குவழிச்சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த வேன், கார் மீது மோதியது.  அதில் கார் உருண்டு சம்பவ இடத்திலேயே படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் முனியாண்டி பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்துதகவல் அறிந்த ஆஸ்டின் பட்டிபோலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இதுதொடர்பாக ஆஸ்டின் பட்டி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

 

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.