Header Ads

  • சற்று முன்

    சித்தர் அடக்கம் போல் தன் குழந்தையை தோட்டத்தில் அடக்கம் செய்யத பெற்றோர்கள்


    சித்தர்கள் உடலை அடக்கம் செய்வது போல் சிறுவன் உடலையும் உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த செண்பகத்தோப்பு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் ஆசிரியர்.
    இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் தனநாராயணன் (16). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் மேற்கொண்டு படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். வலிப்பு நோய்க்காக யோகாசன பயிற்சி பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென தனநாராயணனுக்கு வலிப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டின் அருகில் இருந்த 120 அடி ஆழ கிணற்றில் தனநாராயணன் தவறி விழுந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் தீயணைப்பு நிலையத்திற்கும், 108 ஆம்புலன்சிற்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தனநாராயணனை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனநாராயணனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் விட்டுவிட்டனர். அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த சாமியார் ஒருவர் கூட்டமாக பொதுமக்கள் திரண்டு நிற்பதை பார்த்து அங்கு வந்தார். அவர் தனநாராயணின் கையை பிடித்து பார்த்துவிட்டு அவர் இறக்கவில்லை அவருக்கு உயிர் நாடி உள்ளது. அவர் ஜலசமாதி அடைந்து விட்டார் என கூறினார்.

    இதையடுத்து தனநாராயணனை ஜீவ சமாதி செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி உறைகள் வைத்து பள்ளம் தோண்டி அதில் தனநாராயணனின் கை, கால்களை கட்டி உடலை தியான நிலையில் உட்கார்ந்தபடி வைத்து பூஜை செய்து அடக்கம் செய்தனர்.

    சாமியார்கள், சித்தர்கள் உடலை அடக்கம் செய்வது போல் சிறுவன் உடலையும் உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  
    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad