Header Ads

  • சற்று முன்

    விளாத்திகுளம் அருகே மணல் எடுப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - 126 பேர் கைது



    விளாத்திகுளம் வைப்பாற்றின் கரையோர கிராமம் சித்தவநாயக்கன்பட்டி. மணல் வளமிக்க பகுதியான இந்த கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த கிராமத்தில் ஆற்றின் கரையோரம் உள்ள தனிநபர் நிலத்தில் சவுடு மண் எடுப்பதாகம், பண்ணைக்குட்டை அமைக்கப்படுவதாக கூறி திருட்டுத்தனமாக மணல் அள்ள முயற்சி செய்வதாகவும், மணல் திருடும் கும்பலுக்கு அரசு அதிகாரிகளும் துணை போவதாகவும், தங்கள் பகுதியில் மணல் எடுத்தால் குடிநீர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, விவசாயமும் அழிந்து விடும், எனவே மணல் அள்ளும் முயற்சிகளை கைவிட கோரி அக்கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 22ந்தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தவநாயக்கன்பட்டியில் அக்கிரா மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். 


    அதிகாரிகள் உறுதியளித்தை தொடர்ந்து தங்களது போராட்டத்தினை கைவிட்டனர். இந்நிலையில் மீண்டும் தனியார் நிலத்தில் மணல் எடுக்கப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் மணல் அள்ள பயன்படுத்திய இயந்திரத்தினையும், மணல் அள்ள வந்த லாரியையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மணல் அள்ளப்பட்டு இடத்தில் படுத்துகொண்டு மணல் அள்ளவிடமால் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




    இந்நிலையில் மணல் அள்ளியவர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அனைத்துகட்சியினர் விளாத்திகுளம் தாலூகா அலுவலகத்தில் காத்தியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டயாக குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றியதால் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருந்தாலும் காவல்துறையில் வலுக்கட்டயமாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து வெளியேற்றப்பட்ட மக்கள் விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 126 பேர்கைது செய்து தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad