பேர்ணாம்பட்டு அருகே மலை கிராம மக்கள் 150 நாள் வேலையில் கூலியை உயர்த்தி தரவும் தொடர்ந்து வேலை தர வேண்டியும் நூதன முறையில் வேலை செய்து கொண்டே கோரிக்கை
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா, கொத்தூர் மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராமத்தில் உள்ள பெண்கள் 150 நாள் வேலைக்கு சென்று கிடைக்கும் கூலியை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.தற்போது இந்த மலை கிராமத்தில் செய்யும் 150நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை தருவதில்லை எனவும் கிடைக்கும் வேலையில் கூலியை குறைத்து தருவதாகவும் தெரிவிக்கின்றனர்.இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.மேலும் வேலை செய்யும் ஏரி மற்றும் குட்டைகளில் மண் மிகவும் கடினமாக இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சுத்தம் செய்ய காலதாமதம் ஆகிறது.இதனால் நாங்கள் முறையாக வேலை செய்வதில்லை என அதிகாரிகள் குறை கூறி கூலியை முறையாக தருவதில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.மேலும் விவசாயம் செய்தால் வனவிலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதால், நஷ்டம் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.இதனைத் தொடர்ந்து இன்று 150 நாள் வேலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நூதன முறையில் தலையில் கூடை வைத்துக்கொண்டே வேலை செய்தபடி அதிகாரிகளின் கவனம் ஈர்க்கும் வகையில் கூலியை உயர்த்தி தர வேண்டியும் தொடர்ந்து வேலை தர வேண்டியும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.