காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாகாண்யம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடக்கோரி 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரமேஷ் என்பவர் மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ உடன் கிராம மக்கள் சார்பில் மனு ஒன்றை அளித்தால் அதில் கூறி இருப்பதாவது:-
கல்குவாரியில் அதிகளவில் வெடிமருந்து பயன்படுத்தப்படுவதால் வெடி அதிர்வு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பலத்த வெடி சத்தம் மற்றும் அதிர்வை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொதுமக்கள், குழந்தைகளை பள்ளி, அங்கன்வாடிக்கு அனுப்பவே அச்சமாக இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.
புகார் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ரமேஷ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.