உலக காது கேளாதோர் தினம் – கண்டன ஆர்ப்பாட்டம்
செப்டம்பர் 23 உலக காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு, காது கேளாத மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை உயர்வு, இலவச வீட்டு மனைப் பட்டா, அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தென்சென்னை மாவட்ட செயலாளர் தோழர். சௌமியா மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் தோழர். கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, தகவலறிந்து வந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை ஆணையர் திரு. சீனிவாசன் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அவரிடம் வழங்கப்பட்டது. கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தலைமை ஆணையர் உறுதியளித்தார்.காது கேளாத மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்கான போராட்டம் தொடரும்!






கருத்துகள் இல்லை