சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி சார்பில் 2026-க்கான குறும்படத் திருவிழா நடைபெற்றது. இதில் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்று 70குறும்படங்களை தயாரித்து தங்களது சினிமா மீதான ஆர்வம் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் தங்களது தனித்துவத்தை வெளிக்கொண்டு வந்தனர். இந்த குறும்பட விழாவில் மொத்தம் 70 குறும்படங்கள் பெறப்பட்டன. அவற்றில் இருந்து மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய 50குறும்படங்களை தேர்வு செய்து மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டன.
பல்வேறு கதைக்களங்கள் மற்றும் சமகாலக் கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இக்குறும்படங்கள், இளம் தலைமுறை யினரின்எண்ணங்கள், உணர்வுகள், கனவுகள் மற்றும் அவர்களின் பார்வையில் கண்ட சமூகக் கவலைகளை அழகாக வெளிப்படுத்தின.
எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியின் ஆலோசகர் டாக்டர் மாலதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணா நடுவராக இருந்து 50 குறும் படங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்து கதை சொல்லும் திறன், படைப்பாற்றல், இயக்கம், நடிப்பு மற்றும் ஒட்டுமொத்த திரைப்படத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் 12 குறும்படங்களை இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்தார்.
மாணவர்களின் நுணுக்கமான பார்வையையும், தொழில்முறை அணுகுமுறையையும் பாராட்டிய சுரேஷ் கிருஷ்ணா, இளம் மாணவர்களின் திறமை திரைப்படத் துறையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையை அளிப்பதாகத் தெரிவித்தார்.
இறுதிப் போட்டிக்குத் தேர்வான 12 குறும்படங்களும் "ஷாட் பிலிம் மேலா" நிகழ்வில் திரையிடப்பட்டன.
இந்த குறும்படங்களில் "தி ஃப்ரேம் வி ஃபர்கட்" குறும்படம் சிறந்த குறம்படத்திற்கான விருதை வென்றது. வருணிஹா சிறந்த இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டார்.மேலும்
"அவுட் சைடுதி டோர்"
குறும்படத்தில் நடித்த மாஸ்டர் பர்கவ், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.
மேலும், படத்தொகுப்பு ஒளிப்பதிவு, ஒலிவடிவமைப்பு திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் தனிப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)