செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி
ஞானேஷ் குமார் தேர்தல் அதிகாரி போல் செயல்படாமல் மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுகிறார் மற்றும் அமித் ஷாவின் ஏஜென்டாக செயல்படுகிறார் என்றும் ஒரு தலைப்பட்சமாக தனித்து செயல்படுவதாகவும் எனவே தலைமை தேர்தல் அதிகாரியை உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மறைமலைநகர் காங்கிரஸ் கமிட்டி நகர பொறுப்பாளர் ஜோசப் ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரபு அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார் மேலும் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் சார் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.