• சற்று முன்

    மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் இரண்டாம் பரிசு – ஸ்டார் பள்ளி மாணவனுக்கு பாராட்டு!


    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஸ்டார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் செல்வன் கௌசிக், சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றார்.

    மாணவனின் திறமையை பாராட்டி, ஸ்டார் பள்ளியின் தாளாளர் எஸ். சுப்பிரமணி, பள்ளி தலைமை ஆசிரியர் பெ. ஜெயசுதா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், மாணவன் கௌசிக் மென்மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்புகள் பெற வேண்டும் என வாழ்த்தினர

    தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் மாணவன் கௌசிக்கிற்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad