கோவையில் அடுப்பு, நெருப்பு மற்றும் எண்ணெய் என எதையுமே பயன்படுத்தாமல் 54 வகையான இயற்கை உணவுகளைத் தயாரித்து வழங்கி, உணவு முறையில் புதியப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் 'படையல்' சிவா. சாதாரணமாக சமையல் என்றாலே நெருப்பும் எண்ணெயும் இன்றி சாத்தியமில்லை என்ற நிலையை மாற்றி, இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், சிறுதானியங்கள், தேங்காய்ப்பால் மற்றும் நவதானியங்களைக் கொண்டு சுவையான உணவுகளை இவர் தயாரித்து வருகிறார். இவரது உணவகத்தில் அவியல், சாதம் வகைகள் முதல் இனிப்பு வகைகள் வரை அனைத்துமே சமைக்கப்படாமல் (No Fire No Oil), அதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும் வகையில் தயார் செய்யப்படுகின்றன. காய்கறிகளின் இயற்கை சுவையும் மருத்துவ குணமும் மாறாமல் இருக்க வேண்டும் என்பதே இவரது நோக்கம். ஆரோக்கியத்தைத் தேடும் இன்றைய தலைமுறைக்கு, 'படையல்' சிவாவின் இந்த முயற்சி ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைவதோடு, இயற்கை உணவே நோயற்ற வாழ்விற்கு அடிப்படை என்பதையும் உரக்கச் சொல்கிறது