• சற்று முன்

    திமுக சார்பில் கே .வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம்!


    வேலூர் மாவட்டம், வேலூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கே .வி .குப்பம் சட்டமன்ற தொகுதியில் வேப்பங்கனேரி கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி திமுக பரப்புரை கூட்டம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தயாள மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    நடைபெற்ற கூட்டத்தில் வேலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், வேலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வரும் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சியினரிடமும், மூத்த நிர்வாகிகளிடமும் தீவிர ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார். 

    இக்கூட்டத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி,  திமுக நிர்வாகிகள்  திரளானோர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad