மதுரை மாநகரில் அதிகரிக்கும் தெரு நாய் தொல்லைகள்
மதுரை மாநகரில் நாளுக்கு நாள் ஆடு, மாடு நாய் உள்ளிட்ட கால்நடைகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் மிகவும் சிரமபட்டு வருகின்றனர்.
இதில் நகரில் மாடுகள் மற்றும் தெருநாய்கள் தொல்லை அதிகம் இருந்து வருகின்றன. அதிலும் சாலைகளில் சுற்றித் தெரியும் தெரு நாய்களால் காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் வேலைக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் பாதிப்பு அடைகின்றனர்.
குறிப்பாக ஒரு நாளைக்கு ஏராளமானோர் அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வருகிறன்றனர். குறிப்பாக மதுரை நகரின் மையப்பகுதியான தெப்பக்குளம் காமராஜர் சாலை கீழவாசல் கோரிப்பாளையம் தல்லாகுளம் பெரியார் பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் தெரு நாய் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை