மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல், பழையார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுருக்கு மடி வலைக்கு ஆதரவாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மீனவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்து கருப்புக் கொடியை கடையில் கட்டியுள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க கோரி திருமுல்லைவாசல், பழையார், கொட்டாயமேடு, மடவா மேடு, மன்மத தகர், தாண்டவன்குளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருப்புக் கொடி நட்டு சனிக்கிழமை அன்று திருமுல்லைவாசல் மடவாமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:
தமிழகம்

