Header Ads

  • சற்று முன்

    "அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் நிதியுதவி



    அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட மோசூர், கீழாண்டை தெருவில் வசிக்கும் காந்தம்மாள் க./பெ. (லேட்) ஆதிசேசன் என்பவரது வீடு கடந்த கனமழையால் இடிந்து விழுந்தது.  மேலும்  தக்கோலம், காந்தி நகரில் வசிக்கும் ரவி த./பெ. அமாவாசை  என்பவரது வீடு கனமழையால் இடிந்து விழுந்து 1 பசு மாடு இறந்து விட்டது மேலும் அரக்கோணம், கிருபில்ஸ்பேட்டை செய்யூர்பாட்டை தெருவில் வசிக்கும் கங்காதரன் என்பவரது குடிசை வீடு மின் கசிவால் எரிந்து விட்டது.மேற்படி பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுக்கும் வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி MLA அவர்களது வங்கி கணக்கில் இணைய தளம் வழியாக தலா ரூ.5000/- நிதியுதவி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் நிதியுதவி பெற்று கொண்டு, சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர் 

    மேலும் தகவல் தெரிவித்த அரக்கோணம் ஒன்றிய கழக செயலாளர் பிரகாஷ், அரக்கோணம் நகர கழக செயலாளர் பாண்டுரங்கன், தக்கோலம் பேரூர் கழக செயலாளர் பச்சையப்பன் ஆகியோரும் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad