Header Ads

  • சற்று முன்

    ஸ்டாலினை முதல்வராக்க திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவோம்


    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து திமுக வடக்கு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தோல்வி பயத்தில் பணத்தை கொடுக்கின்றனர் அதிமுக அமமுக கட்சியினர்  மீது குற்றச்சாட்டு
    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனியார் திருமண மண்டபத்தில் திமுக வடக்கு தெற்கு மாவட்ட சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது


    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகள் பணியாற்றிட வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் தனியார் திருமண மண்டபத்தில் திமுக வடக்கு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏ மூர்த்தி மணிமாறன் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ மூர்த்தி திருப்பரங்குன்றம் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் விதமாக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வியூகம் அமைத்து வெற்றி பெறுவோம் ஆளும் கட்சியை சேர்ந்த அதிமுகவினர் பல்லாயிரக்கணக்கான சைக்கிள்களையும் பணத்தையும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர் தேர்தல் அறிவிக்கும் முன்னரே தோல்வி பயத்தில் பணத்தையும் சைக்கிளையும் வழங்குகிறார்கள் ஆனால் திமுகவினர் தேர்தல் வியூகம் அமைத்து பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் மேலும் வருகிற 18-ந்தேதி அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை விளக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார் தோல்வி பயத்தினால்தான் தேர்தல் வருவதற்கு முன்பே பணத்தை வாரி வழங்குகின்றனர் திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 10 சதவீதம் ஆதரவு உயர்ந்துள்ளது திருப்பரங்குன்றத்தில் குடிநீர் பிரச்சனை வைகை ஆற்றில் தண்ணீர் திறந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் எந்தக் கண்மாய்  தண்ணீர் வரவில்லை இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளது இதை மறைப்பதற்காக தான் தற்போது தோல்வி பயத்தில் பணத்தை கொடுத்து வருகின்றனர் எப்படி இருந்தாலும் திமுகவினர் பல்வேறு தேர்தல் வியூகம் வகுத்து ஸ்டாலினை முதல்வராக்க திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்
    இந்நிகழ்ச்சியில் வடக்கு தெற்கு மாவட்ட கழக ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    எமது செய்தியாளர் : நீதி ராஜபாண்டியன் 

    செய்திகளை உடனுக்குடன் அறிய nms today youtube chennal பார்க்கவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad