குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

இரும்பு மனிதர் படேலின் 141-வது பிறந்த நாள் விழா


எட்டயபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தின விழா மத்திய பாஜக அரசின்  சாதனை விளக்க தெருமுனை கூட்டமாக கொண்டாடப்பட்டது..

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமருமான இரும்பு மனிதர் படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக எட்டயபுரத்தில் நகர பாஜக சார்பில்  கொண்டாடப்பட்டது.

எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு சர்தார் வல்லபாய் படேல் 141-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு  மத்திய பாஜக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  எட்டயபுரம் நகர பாஜக தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துவேல், அமைப்பு சாரா அணி தலைவர் அய்யனார், நகர செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ராம்கி வரவேற்று பேசினார்.

திராவிட கட்சிகளால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்கேடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட பாஜக வின்  பிரசார அணி செயலாளர் லட்சுமணகுமார், அமைப்பு சாரா அணி மாவட்ட தலைவர் லட்சுமணன் ஆகியோர் பேசினார். தொடர்ந்து கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் சிவந்தி.கே நாராயணன் நரேந்திர மோடி  தலைமையிலான மத்திய பாஜக அரசின் மூன்று ஆண்டுகால  சாதனைகளை விளக்கி  சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் பாலு, கோவில்பட்டி நகர தலைவர் வேல்ராஜா, விவசாய அணி மாடசாமி, கிளை தலைவர்கள் சேனா(எ)செல்வராஜ், பம்பாய்.கணேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவில் இளம்புவனம்  ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.    
                      - இளசை முலெனின்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.