திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பிரபல நாயுடுஹால் நிறுவனத்தின் சார்பில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, சங்கரா கண் அறக்கட்டளை மற்றும் சங்கரா ஐ ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து மாபெரும் ரத்ததானம், இலவச கணஇம்முகாமில் நாயுடுஹால் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இதில் 55-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
மேலும், ஏராளமான நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக பொது மருத்துவப் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நாயுடுஹால் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் விஜய் பால் ராஜ், திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், அரசு அதிகாரிகள் மற்றும் நிறுவன ஊழியர்கள் பங்கேற்று முகாமை சிறப்பித்தனர்.
பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் வகையிலும், ரத்ததானத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் இம்முகாம் சிறப்பாக நடைபெற்றது.
