"ரத்ததான கொடை வள்ளலை கௌரவிக்க மறந்த மாவட்ட ஆட்சியர்!!!!
""ரத்ததான கொடை வள்ளல் 178 முறை ரத்ததானம் செய்த குமரன்ரவிசங்கரை மறந்த மாவட்ட ஆட்சியர் சமுக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி!!!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்த அமைப்புகளுக்கு கலெக்டர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரன், வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அக்டோபர் 1, தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு இரத்த மையங்களுக்கு தொடர்ந்து இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து இணைந்து செயல்பட்டு வரும் 35 அமைப்புகளுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். தேசிய தன்னார்வ இரத்த தான தினம் அக்டோபர் 01.10.2026 அன்று அனுசரிக்கப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு இரத்த மையங்களுக்கு தொடர்ந்து இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து இணைந்து செயல்பட்டு வரும் அமைப்புகள்மற்றும் நிறுவனங்களுக்கு நினைவுப்பரிவு வழங்கி அவர்களை ஊக்கவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. வாலாஜாபேட்டை மற்றும் அரக்கோணம் அரசு இரத்த மையங்களுக்கு இரத்ததான முகாம் ஏற்பாடு செய்த மொத்த 35 அமைப்புகளுக்கு இவ்விழாவில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இணைஇயக்குநர் மருத்துவம் மற்றும்ஊரக நலப்பணிகள் மரு. சரவணகுமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.உஷாநந்தினி. இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.சந்தியவதனா, துணை ஆட்சியர் பயிற்சி பாரதி மற்றும் ரத்ததான கொடை வள்ளல் 178 முறை ரத்ததானம் செய்த குமரன்ரவிசங்கர்ஜி மற்றும் சமுக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.