ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் வாலாஜாப்பேட்டை மற்றும் ராணிப்பேட்டை நகராட்சியில்
நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
-
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், வாலாஜாப்பேட்டை நகராட்சி, நவாப் தேவடி தெருவில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ.6.10 கோடி மதிப்பீட்டில் வாலாஜா சோளிங்கர் அரக்கோணம் சாலை (SH-61) இருவழிச் சாலையை அகலப்படுத்தி, சாலை ஓரங்களில் தார்ச்சாலையுடன் மேம்படுத்துதல், மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார். இப்பணியில் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறும், அப்பணிகள் முடிவடைந்தவுடன் சாலைப் பணிகளைத் தாமதமின்றி விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குஅறிவுறுத்தினார். தொடர்ந்து, ராணிப்பேட்டை நகராட்சியில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் சென்னை - சித்தூர் - பெங்களூரு சாலையில் தார்ச்சாலை ஓரங்களுடன் கூடிய இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாகஅகலப்படுத்துதல், சிறு பாலங்களை அகலப்படுத்துதல் மற்றும் சிறு குழாய் பாலங்களை அகலப்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு, பணிகள் குறித்து கேட்டறிந்தார். இப்பணிகளில், நவல்பூர், வீசி மோட்டுர் மற்றும் காரை பாலம் முதல் அமிர்தா ஹோட்டல் வரை மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது, முத்துக்கடை மற்றும் வாலாஜா நகர்ப்புறப் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாலாஜா நகர்ப்புறப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், மின்வாரியம் மற்றும் நகராட்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மின்கம்பங்களை மாற்றியமைத்து, மேற்கண்ட பணிகளை விரைந்து முடிக்கவும்,
முத்துக்கடை பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும்போது குடிநீர்க் குழாய்கள் சேதமடையாத வகையில், நெடுஞ்சாலைத் துறையினரும் நகராட்சி அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தேவையான குடிநீர்க் குழாய்களை மாற்றியமைத்து, சாலைப் பணிகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுருத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்கள் செந்தில் குமார், மேகலா, வட்டாட்சியர் பன்னீர் செல்வம், துணை ஆட்சியர் பயிற்சி
கா.பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444