பிரம்மா குமாரிகள் அமைப்பின் கல்விப் பிரிவு சார்பில் உள் அமைதியை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய அளவிலான கல்வியாளர்கள் மாநாடு காஞ்சிபுரம் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் கல்விப் பிரிவு சார்பில் “உள்அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான கல்வி” என்ற தலைப்பில் தேசிய கல்வியாளர்கள் மாநாடு காஞ்சிபுரம் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் ஹேப்பி வில்லேஜ் வளாகத்தில் நடைபெற்றது. கல்வியின் மூலம் மனிதநேய பண்புகள், உள்அமைதி மற்றும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதே தொடக்க நிகழ்வாக “உள் வலிமையுடன் வழிநடத்துதல்” என்ற தலைப்பில் ராஜயோகினி பி.கு. உமா கலந்து கொண்டு பேசினார்.
தமிழ்நாடு, தென் கேரளா மற்றும் புதுச்சேரி பிரம்மா குமாரிகள் சேவை ஒருங்கிணைப்பாளர் ராஜயோகினி பி.கே. பீனா வரவேற்பு பேசினார். பிரம்மா குமாரிகள் கல்விப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து ராஜயோகி பேராசிரியர் பி.கே. பாண்டியமணி விளக்கி பேசினார்.தேசிய கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜயோகி பி.கே. சுமன் முக்கியமான கல்விகளின் சிறப்பு பற்றி பேசினார்
மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசின்ராஜ யோகினி பி கு முத்துமணி தியான அனுபவ பயிற்சி அளித்தார். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டி. விஸ்வநாதன் மற்றும் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். சிவசுப்பிரமணியன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
பின்னர், “கருணை: புதிய பாடத்திட்டம்” என்ற தலைப்பில் பிரம்மா குமாரிகள் கல்விப் பிரிவைச் சேர்ந்த ராஜயோகி பி. கு. சுவாமிநாதன் சிறந்த நாளைக்காக பொறுப்புணர்வு மிக்க தலைமுறையை உருவாக்குதல்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கல்வி, அறிவியல் மற்றும் ஆன்மிகத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். நிறைவு விழாவில், ராஜயோகினி பி. கு. உமா நன்றி கூறினார்.
மேலும்அடையாறு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பி சண்முகம் சவிதா மருத்துவ பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஸ்ரீஜா எஸ் திருவள்ளூர் வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் ஆனந்தகுமார் ஸ்ரீபெரும்புதூர் ஓம் சாந்தி குழும நிறுவனங்களின் தலைவர் பி எம் வி துரை டாக்டர் ஆனந்த்குமார், பி.எம்.வி. துரை மற்றும் சகோதரர் நெல்லையப்பன் உள்ளிட்ட கல்வித்துறை முன்னோடிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பண்புகள் சார்ந்த கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்கள்.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ட உதவி பேராசிரியர்கள் கல்வி நிர்வாகிகள் மற்றும் ஆய்வாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்