அறிவோடு மனிதநேயத்தையும் வளர்ப்பதே கல்வி சுங்குவார்சத்திரத்தில் பிரம்மா குமாரிகள் கல்விப் பிரிவு சார்பில் நடந்த தேசிய கல்வியாளர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் ஹேப்பி வில்லேஜ் தியான மையத்தில், பிரம்மா குமாரிகள் கல்விப் பிரிவு சார்பில் "மன அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான கல்வி என்ற தலைப்பில்" தேசிய கல்வியாளர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1,000 கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்றனர்.
மாநாட்ட சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் ராஜ யோகினி பி.கே.முத்துமணி தியான அனுபவ பயிற்சி அளித்தும்,அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டி. விஸ்வநாதன் மற்றும் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். சிவசுப்பிரமணியன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரை ஆற்றி பேசினர்.
கல்வி என்பது அறிவைப் பகிர்வதுடன் நின்றுவிடாமல், மனிதநேயம், நற்பண்பு, சுய விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை வளர்க்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தனிநபர் மாற்றமே சமூக மாற்றத்திற்கான அடித்தளம் என்றும், மாணவர்களின் அறிவாற்றலுடன் கருணை மற்றும் மனிதநேயத்தையும் வளர்ப்பது அவசியம் என்றும் பேச்சாளர்கள் தெரிவித்தனர். ராஜயோக தியானப் பயிற்சி மற்றும் சிறந்த நாளைக்காக பொறுப்புள்ள தலைமுறையை உருவாக்குதல்என்ற குழு விவாதமும் நடைபெற்றது. தியானம் மற்றும் நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்ட கல்வியே அமைதியான சமூகத்தை உருவாக்கும் என்ற கருத்துடன் இம்மாநாடு நிறைவடைந்தது.