விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தல்: ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பா.ம.க. மனு!
வாலாஜா / ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கல்குவாரிகளை மூட வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பா.ம.க. மாவட்டத் தலைவர் சுப்பிரமணி மற்றும் மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ இளவழகன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், ஒன்றிய செயலாளர் பாலாஜி ஞானசேகரன் தலைமையில் நிர்வாகிகள் இந்த மனுவை வழங்கினர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது வாலாஜா ஒன்றியம், அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட செங்காடு மோட்டூர் மற்றும் முசிறி ஆகிய பகுதிகளில் பல கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் அரசு விதிமுறைகளை முற்றிலுமாக மீறி அளவுக்கு அதிகமாகக் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சட்டவிரோதமாக அதிக
கல்குவாரிகளைச் சுற்றி ஏராளமான விவசாய நிலங்களும், தனியார் பள்ளிகளும் அமைந்துள்ளன. குவாரிகளில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான தூசியால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அருகில் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகள் முழுவதும் தூசி படிந்துள்ளதால், மாணவர்கள் அமர்ந்து பாடம் கற்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் குழந்தைகளுக்குக் கடுமையான சுவாசப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிகழ்வில் அனந்தலை விநாயகம், பாகவெளி ராமு, மாவட்டத் துணைச் செயலாளர் மோகன், விஜயன், தகரகுப்பம் அணி விநாயகம், பகவான், கார்த்தி, வழக்கறிஞர் கவியரசு, இளைஞரணி நகரச் செயலாளர் செல்வம் மற்றும் மதன் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக அனந்தலை, செங்காடு மோட்டூர் மற்றும் முசிறி பகுதிகளில் உள்ள கல்குவாரிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அரசு விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவற்றை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க.வினர் வலியுறுத்தியுள்ளனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.






கருத்துகள் இல்லை